தாஜ்மஹால் டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் உள்ள டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் அருகே 5 அடி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தாஜ்மஹால் டிக்கெட் கவுண்டருக்கு வந்து அங்கிருந்த பாம்பை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிடித்தனர். இதனை அடுத்து அந்த பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது

சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் தாஜ்மஹாலில் திடீரென 5 அடி நீளத்தில் பாம்பு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும் உடனடியாக தாஜ்மஹால் அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததற்கு நன்றி என்றும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

More News

'ஜார்ஜியாவில் 'தளபதி 65' படக்குழுவினர்: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வீடியோ

நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்கு அளித்த தளபதி விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு சென்னையிலிருந்து ஜார்ஜியா கிளம்பினார்

தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும்  அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஸ்டாலினை முந்திய பழனிச்சாமி...! வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...?

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்தவர்களின் வாக்குப்பதிவுகள் வீதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை' இசைஞானியின் குரலில் 'மாமனிதன்' பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில்