கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வந்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் இன்று புதிதாக உதயமாகி உள்ள ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் கல்லூரிகளின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி துணைவேந்தர் துரைசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

வெப் சீரீஸ் லிஸ்ட்டில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

திருமணம் கணவரோடு, முதலிரவு மாமனாருடனா? அதிர்ச்சி அடைந்த நெல்லை பெண்

விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

கணவர் விவாகரத்து செய்த சில நிமிடங்களில் பாலியல் பலாத்காரம் செய்த மாமனார்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரை அவரது கணவர் விவாகரத்து செய்த அடுத்த சில நிமிடங்களில், கணவரின் தந்தை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது

குழந்தை தான் இறந்துவிட்டதே, பின் ஏன் பால் சுரக்கின்றது? ஒரு தாயின் கேள்விக்கு கிடைத்த விடை!

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு 63 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதை அடுத்து குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை மரணம் அடைந்ததால்

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது என்பது தெரிந்ததே.