லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி என்பதும் இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சீன ஊடகம் ஒன்று இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதில் லடாக் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் மற்றும் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக தகவல் அளித்துள்ளது. மேலும் 11 சீன வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்த சீன ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை ’இந்தியாதான் எல்லையில் முதலில் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய வீரர்கள் முதலில் தாக்குதல் நடத்தியதால் தான் இரு நாட்டு வீரர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் குறித்து இருதரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை தீர்த்து கொள்ளலாம் என்றும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

More News

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சீன துருப்புகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம்

லடாக்கில் சீன ராணுவம் திடீர் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய-சீன எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக

தந்தைக்கு முடிவெட்டி காசு வாங்கி கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பதட்டம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது: புதிய தேதி அறிவிப்பு

உலக அளவில் திரையுலகினர்கள் பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த்சிங் இறுதி சடங்கின்போது சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.