4வது முறையாக ரஜினி படம் செய்த சாதனை

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருந்து வருவதால் விநியோகிஸ்தர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் ஏற்கனவே ரூ.100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் மட்டுமெ கடந்த 6 நாட்களில் இரண்டு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. ஏற்கனவே 'எந்திரன்', 'கபாலி', '2.0' ஆகிய திரைப்படங்கள் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது அவர் நடித்த நான்காவது படமும் அதே சாதனையை செய்துள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகரின் படமும் ஒருமுறை கூட இரண்டு மில்லியன் டாலர் அமெரிக்காவில் வசூல் செய்யாத நிலையில் ரஜினியின் அடுத்தடுத்த நான்கு படங்கள் இரண்டு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது அவர் இன்னும் வசூலிலும் சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

More News

உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்

உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கட்-அவுட், பேனர் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும்போது கட் அவுட், பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது என்பது ரசிகர்களால்

28 நாளில் 18 ரிலீஸ்: பிப்ரவரியில் வரிசை கட்டும் படங்கள்

இம்மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது.

உலகின் பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவர்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய பிரபல வீரர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கொடுத்த 299 என்ற இமாலய இலக்கை இந்திய அணி 49.2 ஓவர்களில் எட்டி வெற்றிக்கனியை பறித்தது

'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல ஹீரோ

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.