குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4G ஸ்மார்ட்போன்: அரசின் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,July 11 2017]
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வந்துவிடும்போல் தெரிகிறது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள், சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் மாவட்ட நிர்வாகம் ஒருபடி மேலே போய் குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4G ஸ்மார்ட்போன் இலவசம் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பின்னர் அந்த மாவட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 102% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அறிவிப்புக்கு பின்னர் 1410 பேர் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாகவும் இவர்களில் 270 பேர் ஆண்கள் என்ற புள்ளிவிபரமும் வெளிவந்துள்ளது. இந்த மாவட்டத்தை போலவே இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.