இன்று ஒரே நாளில் 4985 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 5000ஐ நெருங்கிய நிலையில் இன்றும் அதே 5000ஐ நெருங்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சென்னையில் வழக்கம்போல் 1200 என்ற அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,235 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 70பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,861 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,776 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 52,087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 19,84,579 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது