ஒன்றல்ல, இரண்டல்ல 49 பேர் வெற்றி: விஜய் மக்கள் இயக்க தலைவர் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,October 12 2021]

நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 49 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து கூறிய போது ’ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டதாகவும் தற்போது வரை 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து 49 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற அனைவருமே வலுவான திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராஜூ ஜெயமோகன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில விஷயங்களை நீங்க தொடக்கூடாது: 'பேர் வச்சாலும்' ரீமிக்ஸ் பாடல் குறித்து குஷ்பு!

கமலஹாசன், குஷ்பு உள்பட பலர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'பேர் வச்சாலும்' என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் சமீபத்தில் சந்தானம் நடித்த திரைப்படத்தில் இடம் பெற்றது

'தளபதி 66': படப்பிடிப்பு தொடங்கும் முன்பே மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான சாட்டிலைட் உரிமை!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு உண்டா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

நடப்பாண்டில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு கிடையாது என்றும், நேரடியாக முழு ஆண்டு தேர்வு நடைபெறும்

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகி!

அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்