கொரோனா பாதிப்பு 477 பேர்கள், குணமானோர் 939 பேர்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி

தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த 477 பேர்களில் 93 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,599 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 477 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,278 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 939 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களை விட இருமடங்கு கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை உள்ளதால் இதுவொரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால்  தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது

More News

மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? ஒரு ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகியாக நடித்தவுடன் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானார்.

உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது: பிரபல இயக்குனர் உருக்கம்

ஜிவி பிரகாஷ் நடித்த '4ஜி' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அருண் பிரசாத் என்பவர் நேற்று சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

கொரோனாவுக்கு Remdesivir சிகிச்சை: மருத்துவமனையில் தங்கும் நாட்களை 31% ஆக குறைந்துள்ளது!!!

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்து பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

குரங்குகளிடம் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை!!! நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவு!!!

கொரோனா தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கடும் சர்ச்சையில் கொரோனா நிவாரண நிதியை வாரிக்கொடுத்த பில்கேட்ஸ்!!! காரணம் என்ன???

பேஃர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் தரவுகளின் படி உலகில் அதிக கொரோனா நன்கொடை நிதியை வழங்கிய இரண்டாவது நபர் பில்கேட்ஸ்.