நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை: ரஜினியின் 47 வருட திரையுலக வாழ்க்கைக்கு வாழ்த்து கூறிய இருவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் இரண்டு மகள்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தங்களது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முதல் படமான கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இதனை அடுத்து நேற்றுடன் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்தியா தனது 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பல தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வீரவணக்கம். அதேபோல் 47 வருட ரஜினியிஸம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சொந்தக்காரரான ரஜினிகாந்த் அவர்களுக்கு மகளாக பிறந்ததில் எனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், ‘47 வருட மேஜிக்! நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை, வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு நீங்கள். லவ் யூ தலைவா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.
47 years of pure magic !!! ?????? you are gods child dearest appa !!!! You are an emotion that words cannot explain !!!
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 15, 2022
Love you Thalaivaaa ?????????????????? #47YearsOfRajinism pic.twitter.com/b4bzmcYLzz
76 years of independence ???? saluting sacrifices,struggles n strength.. #proudindian????
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) August 15, 2022
47 years of #rajinism .. sheer hard work grit n dedication !proud to born to him #prouddaughter❤️ pic.twitter.com/be5yZGDHwu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments