46 வயதில் பிகினி உடை கிளாமர்: மாலத்தீவில் கலக்கும் நடிகை!

  • IndiaGlitz, [Thursday,June 23 2022]

46 வயதில் பிகினி காஸ்டியூம் அணிந்து மாலத்தீவில் கிளாமராக போஸ் கொடுத்த நடிகையின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1994ஆம் ஆண்டு ’மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றவர் நடிகை சுஷ்மிதாசென். இவர் தமிழில் நாகர்ஜுனா நடித்த ’ரட்சகன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ’முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஏராளமான இந்தி படங்களிலும் ஒரு சில வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த ’ஆர்யா’ என்ற வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இரண்டு சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஷ்மிதா சென்னுக்கு ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள சுஷ்மிதா சென், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.