சராசரியாக தினமும் 60ஐ தாண்டும் பலி எண்ணிக்கை: தீவிரமடைகிறதா கொரோனா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சராசரியாக 4000ஐ தாண்டி வரும் நிலையில் தினமும் சராசரியாக 60 பேர்களுக்கும் மேல் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். அதாவது கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் இன்று வரை தினமும் கொரோனாவால் பலியானவர்களின் தினசரி எண்ணிக்கை 62,60,63,57,64,65,60,61,65,64,65,64,69,68,66,67,68.69 என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4549, பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82128 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 69 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2236 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5106 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 107,416 ஆகும். இன்று குணமானோர் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் 44,186 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 17,09,459 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது