நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்.. 45 வயது விஜய், சூர்யா பட நாயகியின் போட்டோஷூட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், சூர்யா படங்களில் நாயகியாக நடித்த 45 வயது நடிகை நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தளபதி விஜய் நடித்த ’பத்ரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதன் பின்னர் அவர் ’ரோஜா கூட்டம்’ ’சில்லுனு ஒரு காதல்’ ’சித்திரையில் நிலாச்சோறு’ ’களவாடிய பொழுதுகள்’ ’கொலையுதிர் காலம் ’உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஜெயம் ரவி நடித்துள்ள ’பிரதர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 45 வயதாகும் பூமிகா, பரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் பூமிகா இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நீண்ட நாள் கழித்து நீச்சல் குளத்தில் ஒரு குளியல் போட்டதாக பிகினியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
மேலும் வயது என்பது ஒரு நம்பர் தான், இன்றும் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அழகாக இருக்கிறீர்கள் என்றும், உங்கள் பற்கள் வெண்மையாக இருக்கிறது என்ன டூத் பேஸ்ட் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் இந்த புகைப்படங்களுக்கு பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments