45 வயது பெண்ணுடன் 29 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரின் மரணத்திற்கு பின் தெரிந்த உண்மை!
Send us your feedback to audioarticles@vaarta.com
29 வயது இளைஞர் ஒருவர் 45 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்தது இருவரின் மரணத்திற்கு பின்னர் தெரிய வந்துள்ளதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது துரைக்கண்ணன் என்பவர் சாலை விபத்தில் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் துரைக்கண்ணனின் எதிர் வீட்டில் குடியிருக்கும் 45 வயது பெண் ஜெகஜோதி என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட துரைகண்ணனின் உடலை தோண்டி எடுக்க முயற்சித்து கொண்டிருந்தார். அப்போது துரைகண்ணனின் உறவினர்கள் பார்த்து ஜெகஜோதியை எச்சரித்தனர். இதன்பின் சோகத்துடன் வீட்டிற்கு சென்ற ஜெகஜோதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஜெகஜோதி, துரைகண்ணனின் சடலத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததும் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதும் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணை செய்தபோது துரைகண்ணனுக்கும் ஜெகஜோதிக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது.
கள்ளகாதலன் சாலை விபத்தில் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல்தான் ஜெகஜோதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெகஜோதி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கூட கருத்தில் கொள்ளாமல் கள்ளக்காதலனுக்காக தற்கொலை செய்து கொண்டது அவருடைய உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் உயிரோடு இருந்தபோது தெரியாத கள்ளக்காதல் மரணத்திற்குப்பின் தெரிய வந்துள்ளதால் இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com