சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: 1.5 லட்சத்தை தாண்டிய தமிழக பாதிப்பு
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் சென்னையில் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 1078 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 1,291 பேர்களுக்கு என அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,820 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,942 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 68 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2167 என்பதும குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,000 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,310 ஆகும். கடந்த சில நாட்களாகவே 3000 முதல் 4000 வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று குணமானோர் எண்ணிக்கை 5000ஐ தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் 39,715 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது