9 மாதங்களுக்கு பின் திருமணம் நடந்ததை பகிரங்கமாக அறிவித்த 44 வயது நடிகை: கர்ப்பமாக இருக்கின்றாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவர் 9 மாதங்களுக்கு பின் தனக்கு திருமணம் நடந்ததை ஆதாரத்துடன் வெளியிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரத்குமார் நடித்த ’கம்பீரம்’ என்ற திரைப்படத்திலும் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தவர் நடிகை ராக்கி சாவாந்த். இந்த நிலையில் 44 வயது ராக்கி சாவந்த் திடீரென திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். மைசூரை சேர்ந்த ஆதில் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண குறித்த ஆதாரத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ரித்திங் சிங் என்பவரை ராக்கி சாவந்த் திருமணம் செய்து கொண்டார் என்பதும், அதன் பிறகு மூன்றை ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்த ராக்கி சாவந்த் இடம், ‘நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு ’அது முற்றிலும் வதந்தி’ என பதிலளித்தார். ’இனிமேல் குழந்தை பெற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ’நோ கமெண்ட்ஸ்’ என்ற பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments