திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பூர் மாவடத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அந்த நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல நேற்று கோவை மாவட்டத்தில் 2 பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்ணிற்கும் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண்ணிற்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருப்பூரிலும் 44 வயதான ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
“ஆர்த்தோமிக்சோவிரிடே“ எனும் குடும்பத்தை சேர்ந்த இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் இந்தப் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் வகையைச் சேர்ந்தது. மேலும் விரைவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய். இந்த தொற்றுநோய், பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனேவே சுற்றுப்புறத் தூய்மை, மாஸ்க் அணிவது, கைகளைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout