திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

திருப்பூர் மாவடத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அந்த நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல நேற்று கோவை மாவட்டத்தில் 2 பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்ணிற்கும் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண்ணிற்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பூரிலும் 44 வயதான ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

“ஆர்த்தோமிக்சோவிரிடே“ எனும் குடும்பத்தை சேர்ந்த இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் இந்தப் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் வகையைச் சேர்ந்தது. மேலும் விரைவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய். இந்த தொற்றுநோய், பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனேவே சுற்றுப்புறத் தூய்மை, மாஸ்க் அணிவது, கைகளைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

More News

அபிஷேக்கின் வைல்ட்-கார்ட் எண்ட்ரி எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும்

கண்ணாடி டாஸ்க்கில் மனம் திறந்த ராஜூ: சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்கா!

பிரியங்காவின் நரித்தனத்தை கண்ணாடி டாஸ்க் மூலம் ராஜு காமெடியாக கூறியதை சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்காவின் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.

'பாகுபலி 2' விநியோகிஸ்தருடன் கைகோர்க்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

'பாகுபலி 2' திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்த நிறுவனத்துடன் 'மாநாடு' தயாரிப்பாளர் கைகோர்த்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களா? ஆறு பேரும் யார் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களை எதிர்கொள்வதாக கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது

சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் என அறிவித்தவர் மீது காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்த பாமக மாவட்ட செயலாளர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.