தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,018 ஆகும். முதல்முறையாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 434 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5946 ஆகும்.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 359 பேர்கள் குணமாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்தம் 2599 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள்னர். அதேபோல் இன்று மட்டும் தமிழகத்தில் 10,883 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 290,906 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 5 பேர் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

More News

கொரோன பரவல் நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி???

கொரோனா பரவல் கடும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனாவில் புதிய அவதாரம் எடுத்து வரும் பேய் கிராமங்கள்!!! எங்கே தெரியுமா???

உத்திரகாண்டில் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது

'காதல்' குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா!

இந்த கொரோனா வைரஸ் விடுமுறையில் பல நடிகைகள் தங்களது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருவதை பார்த்து வருகிறோம்

காதலியை சர்ப்ரைஸ் செய்ய வீட்டையே தியேட்டராக மாற்றிய இளைஞர்: வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க முடியாமல் சினிமா ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது, விரைவில் தீர்ப்பு: கமல்ஹாசன் 

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று சில மணி நேரத்திற்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.