2000ஐ கடந்தது தமிழக கொரோனா பலி எண்ணிக்கை: இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தில் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தமிழகத்தில் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழக மொத்த பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,798 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,573 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 66 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3035 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,567 ஆகும். கடந்த சில நாட்களாகவே 3000 முதல் 4000 வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருவதால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் 44,560 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மீண்டும் மிஷ்கினுடன் இணையும் விஷால்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது

உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்!!! குதூகலிக்கும் நாடு!!!

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் இடம் மாறுகிறதா டிக்டாக் அலுவலகம்?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அலாரம் வச்சுக்கொங்க, 'டாக்டர்' அப்டேட் வருது: சிவகார்த்திகேயன் அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்

தமிழகம் முழுவதும் ஜூலை 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: