close
Choose your channels

நடிகை ராதிகாவை பெருமைப்படுத்திய ஹரி-அருண்விஜய் படக்குழுவினர்!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ராதிகாவுக்கு ஹரி மற்றும் அருண்விஜய் படக்குழுவினர் பெருமைப்படுத்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை ராதிகா அறிமுகமான முதல் திரைப்படம் பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’. கடந்த 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் உருவான இந்தப் படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்தே ராதிகாவுக்கு பல வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராதிகா திரையுலகில் அறிமுகமான முதல் படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பின் இடையே ராதிகாவை பெருமைப்படுத்தும் விதமாக படக்குழுவினர் சிறிய விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் ராதிகா கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment