வாக்கிங் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் கடந்த 1ஆம் தேதி வாக்கிங் சென்றபோது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் என்ற 43 வயது பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து வருகிறார். திருமணமாகி இரண்டு மகன்களுக்கு தாயான இவர் அமெரிக்காவில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் சிஸ்லோம் டிரையல் பார்க் என்ற பகுதியில் அவர் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பலமுறை கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொலை நடந்த அதே பகுதியில் அதே நேரத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இளைஞருக்கும் சென் கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வாக்கிங் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.