மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் மீண்டு வரும் சென்னை!

தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 4000க்கும் குறைவாக இருந்த தமிழக கொரோனா தொற்று மீண்டும் 4000ஐ தாண்டி இருப்பது அதிர்ச்சிக்குரிய செய்தி என்றாலும் வழக்கம்போல் சென்னை மீண்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126,581 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1765 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,161 ஆகும். மேலும் இன்று 42,369 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும், மொத்தம் 14,91,783 பேர்களுக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது