கொரோனா விஷயத்தில் புகைப்பழக்கம் இவ்ளோ ஆபத்தா? மருத்துவர்கள் பதில்!
- IndiaGlitz, [Wednesday,June 02 2021]
மனித உடலில் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது புகைப்பழக்கம். இதை மருத்துவர்கள் முன்பே உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதோடு நுரையீரல் தொடர்பான புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கும் இதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்த ஆபத்து தற்போது கொரோனா விஷயத்திலும் தொடருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதாவது புகைப்பழக்கம் போன்ற தீயப் பழக்கங்கள் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் மனித சுவாச உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் நுரையீரலை தாக்குகிறது. அந்த வகையில் ஏற்கனவே புகைப்பழக்கம் போன்ற கேடான பழக்கத்தால் வலுவிழந்து போய் இருக்கும் நபர்களின் நுரையீரலை இந்த கொரோனா வைரஸ் மேலும் தாக்கி எளிதாக உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.
இதுபோன்ற ஒரு நிகழ்வு தற்போது உத்திரிப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்று இருக்கிறது. மீரட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 767 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 320 பேருக்கு புகைப்பழக்கம், சுருட்டு, பான் பிராக் போன்ற பழக்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொரோனா உயிரிழப்புகளில் தற்போது 42% புகைப்பழக்கமும் ஒரு காரணமாக அமைந்து இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே புகை என்ற கேடான விஷயத்தை குறித்து எச்சரிக்கையாக இருப்பது நலம்