மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா: சென்னையில் 2 வது நாளாக குறைந்த பாதிப்பு

  • IndiaGlitz, [Sunday,July 05 2020]

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்றும் 4வது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சென்னையில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றை போலவே இன்றும் 2000க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சென்னை மக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு செய்தி ஆகும்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 4150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 என அதிகரித்துள்ளது

மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 68,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1510 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2186 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 62,778 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 34,831 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 13,41,715 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

 

More News

மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி கடந்த சில நாட்களாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம், ஜெயப்பிரியா மரணம் ஆகியவை ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.

கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே

நுழைவாயில் முதல் பாத்ரூம் வரை முழுக்க முழுக்க தங்கம்: வியட்நாம் தங்க ஹோட்டலின் ஆச்சரிய புகைப்படங்கள்!

வியட்நாமில் டன் கணக்கில் தங்கத்தினால் முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

மத போதகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேர்: கொரோனா அச்சத்தால் 3 கிராமங்களுக்கு சீல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்,

வொர்க் ஃப்ரம் ஹோமில் இவ்வளவு சின்சியரா? மணமேடையிலும் லேப்டாப்பில் வொர்க் செய்யும் மணமகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வொர்க் ஃபிரம் ஹோம்