41 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த கவுதம்மேனனின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கவுதம் மேனன் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வந்த 'நரகாசுரன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்டது. படத்தை ஒப்புக்கொள்ளும்போது இந்த படத்தின் படப்பிடிப்பை 41 நாட்களில் முடித்துவிடுவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னிடம் வாக்களித்ததாகவும், அதன்படி மிகச்சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டதாகவும் கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்

மேலும் ஒரு தயாரிப்பாளராக தன்னை அசர வைத்த கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்கள் என்று கூறிய கவுதம் மேனன், 'நரகாசுரன்' படத்தை முதல் ஆளாக பார்க்க பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப் கிஷான் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரேயா சரண், இந்திரஜித் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ரான் எதான் யோஹன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்