10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்! பணத்திற்காக அரங்கேறிய அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பணத்திற்கு ஆசைப்பட்டு, 10 வயது மகளை 40 வயதாகும் நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த, கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர், 40 வயதாகும் முகமது சோமர். இவர் தரகர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார்.
அப்போது 10 வயது ஆகும் சிறுமியின் தந்தை, தன்னுடைய மகளுக்கு 17 வயதாவதாக பொய் சொல்லி, முகமது சோமாரிடம் இரண்டரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, மகளை திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி மூன்று தினங்களுக்கு முன், 10 வயது சிறுமிக்கும் முகமது சோமபருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. சிறுமிக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாததால், அவர் அழுது கொண்டே இருந்துள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு முகமது சோமபரை கைது செய்தனர். மேலும் இந்த திருமணத்திற்கு முக்கிய காரணமான தரகர் மற்றும் சிறுமியின் தந்தை இருவரும் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com