திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து திரையுலகின் மூத்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த்: 40 ஆண்டுகள் தமிழ் திரை துறையில் வெற்றிகரமாக நடித்து மக்களை மகிழ்வித்த என்னுடைய நண்பர் .அரசியலில் எனக்கு மூத்தவர் .நல்ல உறுதி குணம் கொண்டவர் அன்பானவர் , பண்பானவர் இருந்தாலும் கோபக்காரர் .நடிகர் சங்கத்தை மீட்டு எடுத்தவர் .தான் யாரென்று மக்களுக்கு நிருபித்து காட்டியவர் .படிக்காதவர்க்களுக்கும் பிடித்தவர் என்னுடைய சகோதரர் விஜயகாந்த் .
கமல்ஹாசன்: அரசியலில் எனக்கு மூத்தவர் , திரையுலகில் எனக்கு இளையவர் , நண்பர் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் 40 ஆண்டு காலம் திரையுலகில் நிறைவு செய்துள்ளார் .முன் அனுபவம் ஏதுமில்லாத முன்னோடிகள் யாரும் இல்லாமல் போட்டிகள் அதிகமாக உள்ள இத்துறைக்கு வந்து சாதித்துள்ளார் விஜயகாந்த் ,
சூர்யா: புரட்சி தலைவர் எம்,ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான் , அவரை நம்பி சினிமாவிலும் , நிஜ வாழ்கையிலும் நஷ்டபட்டவர்கள் என்று யாரையும் நான் கேள்விபட்டது இல்லை .ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திக்கும் பழக்கத்தை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் .வெளி ஊருக்கு சென்றால் அந்த ஊரில் உள்ள ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் வீட்டில் தங்குவதை பழக்கமாக கொண்டவர் .இதை போன்ற விஷயங்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments