திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து திரையுலகின் மூத்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ரஜினிகாந்த்:  40 ஆண்டுகள் தமிழ் திரை துறையில் வெற்றிகரமாக நடித்து மக்களை மகிழ்வித்த என்னுடைய நண்பர் .அரசியலில் எனக்கு மூத்தவர் .நல்ல உறுதி குணம் கொண்டவர் அன்பானவர் , பண்பானவர் இருந்தாலும் கோபக்காரர் .நடிகர் சங்கத்தை மீட்டு எடுத்தவர் .தான் யாரென்று மக்களுக்கு நிருபித்து காட்டியவர் .படிக்காதவர்க்களுக்கும் பிடித்தவர் என்னுடைய சகோதரர் விஜயகாந்த் .

கமல்ஹாசன்: அரசியலில் எனக்கு மூத்தவர் , திரையுலகில் எனக்கு இளையவர் , நண்பர் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் 40 ஆண்டு காலம் திரையுலகில் நிறைவு செய்துள்ளார் .முன் அனுபவம் ஏதுமில்லாத முன்னோடிகள் யாரும் இல்லாமல் போட்டிகள் அதிகமாக உள்ள இத்துறைக்கு வந்து சாதித்துள்ளார் விஜயகாந்த் ,

சூர்யா: புரட்சி தலைவர் எம்,ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான் , அவரை நம்பி சினிமாவிலும் , நிஜ வாழ்கையிலும் நஷ்டபட்டவர்கள் என்று யாரையும் நான் கேள்விபட்டது இல்லை .ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திக்கும் பழக்கத்தை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் .வெளி ஊருக்கு சென்றால் அந்த ஊரில் உள்ள ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் வீட்டில் தங்குவதை பழக்கமாக கொண்டவர் .இதை போன்ற விஷயங்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது .

More News

தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளது.

பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்து வருகிறார்.

பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,.

காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.

சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது