சீனாவில் 40 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கத்திக்குத்து- பாதுகாவலரின் வெறிச்செயல்!!!

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

 

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி ஒன்றில் தற்போது பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அத்தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்து வந்த பாதுகாவலரே 40 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கத்தியால் குத்தி இருக்கிறார். இத்தகவலை சீன ஊடகமான டெய்லி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது. இச்சம்பவத்தில் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இன்னும் வெளியாக வில்லை. அதேபோல என்ன காரணத்திற்காக பாதுகாவலர் அவர்களை கொலை செய்தார் என்பது குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை.

சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்தே தொடர்ந்து மனிதத் தன்மையற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு துறையான PTI தகவல் தெரிவிக்கிறது. இதனால் பல இடங்களில் கத்துக்குத்து, வழிப்பறி போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நேரத்தில் மக்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகியதாகவும் கொரோனாவிற்கு பின்னதான பொருளாதார தாக்கம் போன்ற காரணிகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் உலகம் முழுவதிலும் மனித நேயம் குறைந்து வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.