கொரோனா தாக்கத்தால் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம்!!! ILO தலைமை இயக்குநர்!!!

  • IndiaGlitz, [Thursday,April 09 2020]

 

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் 200 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும் என ஐ.நா. சபையின் ஓர் அங்கமாக விளங்கும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் (ILO) தலைமை இயக்குநர் கெய் ரைடர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா SARS-Covid-2 பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம், கடும் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது.  இதற்கு முன்னர் உலகளவில் நிலவிய கடும் நெருக்கடி ஆண்டான 2008-2009 ஐ விட தற்போது உலகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த 3 மாதங்களில் 200 மில்லியன் தொழிலாளர்கள் தங்களது முழுநேர வேலைவாய்ப்பை இழக்கப்போகிறார்கள், இந்த வேலையிழப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துளளார்.

25 மில்லியன் அளவிலான வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக (ILO) கணக்கிட்டு இருக்கிறது. இந்த அளவீடு என்பது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தவினால் வீடுகளில் முடங்கியுள்ளனர் என்பதற்கு சமமாகும். கொரோனா பாதிப்பு அதிகப்படுவதற்கு முன்பே உலகம் முழுவதும் வேலையின்மை 190 மில்லியனாக இருந்தது என ஜெனீவாவில் நடந்த வீடியோ காணொலி மூலம் (ILO) தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நான்கு முக்கிய துறைகளின் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவும் மற்றும் தங்கும் இடங்களில் வேலைப்பார்ப்பவர்கள் (144 மில்லியன் தொழிலாளர்கள்), சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் (482 மில்லியன்), வணிக சேவைகள் மற்றும் நிர்வாகம் (157 மில்லியன்), உற்பத்தி (463 மில்லியன்) எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது.

முழுநேரத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் சந்தித்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக வேலைசெய்து வருகின்றனர். நகர்ப்புறத் துப்புரவு துறைகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களை செய்துவரும் அன்றாட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைமை தற்போதே ஆரம்பித்து விட்டது.

இந்தியாவில் முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்தியாவில் 40 கோடி அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயநிலைக்குத் தள்ளப்படலாம். ஊரடங்கு காலங்களில் இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்குத் தேவையான ஏற்பாடுகள் இல்லையென்றால் அதிக ஆபத்துக்களை சந்திக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார். 

More News

கொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட

வரும் டிசம்பரில் மிகப்பெரிய அழிவை சந்திப்போம்: 14 வயது ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடரான 14 வயது அபிக்யா ஆனந்த் உலகம் முழுவதும் ஜனவரி முதல் கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்கும் என்றும் அந்த வைரஸ் மே மாதம் வரை இருக்கும் என்றும்

துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை: காலில் விழுந்து கும்பிட்ட பொதுமக்கள்

துப்புரவு பணியாளர்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த பலர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அவர்கள் செய்யும் தன்னலம் கருதாத, தியாக மனப்பான்மையுடன் கூடிய பணியை பார்த்து

23 ஆயிரம் சினிமா தொழிலாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.3000 டெபாசிட் செய்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் சினிமா தொழிலாளிகளின் பசியைப் போக்குவதற்காக

விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு: மருத்துவமனையாக மாறும் கல்லூரி

கொரோனா வைரஸால் தமிழகத்தில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும்