4 வயது சிறுவனின் உயிரை குடித்த ஸ்னாக்ஸ் பாக்கெட்

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

வியாபார போட்டியின் காரணமாக உணவுபொருட்கள், ஸ்னாக்ஸ் பொருட்களின் உற்பத்தியாளர்கள் விதவிதமாக சிந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளின் ஸ்காக்ஸ் பாக்கெட்டுகளில் மினியேச்சர் பொம்மைகளை இணைத்து விற்பனை செய்வது. இந்த முயற்சிக்கு குழந்தைகளின் அமோக ஆதரவு கிடைத்ததை அடுத்து பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கு பிடித்த கேரக்டர்கள், பொம்மைகளின் மினியேச்சர்களை உணவுப்பொருளுடன் இணைத்து விற்பனை செய்கின்றன

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், மினியேச்சர் பொம்மையை தின்பண்டம் என்று தவறாக கருதி முழுங்கிவிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடந்த விசாரணையில் உணவுப்பொருளுடன் மிகவும் சிறியதாக இருந்த பொம்மையை அந்த சிறுவன் கவனிக்காமல் விழுங்கிவிட்டதாகவும், இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு தொடர்ச்சியான வாந்தி வந்ததாகவும், உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தபோது, 'சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்' கூறியதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் அந்த உணவுப்பொருள் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

More News

சந்தர்ப்பம் பார்த்து அமலாபாலிடம் புரபோஸ் செய்த ஆர்யா

நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை என்று புதுச்சேரி அமைச்சர் கூறி

கமல்ஹாசனின் 11வது அவதாரத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் கண்டனம்

பிரபல வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொடர் எழுதி வருவது தெரிந்ததே.

மெர்சலான கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த பாஜக தொண்டர்கள்

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர்.

சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்: திரை முன்னோட்டம்

வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', 'ஜீவா' உள்பட பல தரமான வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படம் தான் 'நெஞ்சில் துணிவிருந்தால்'

வெயிலை பார்த்து ஏமாற வேண்டாம், இன்றும் மழை உண்டு. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்