4 வயது சிறுவனின் உயிரை குடித்த ஸ்னாக்ஸ் பாக்கெட்
- IndiaGlitz, [Thursday,November 02 2017]
வியாபார போட்டியின் காரணமாக உணவுபொருட்கள், ஸ்னாக்ஸ் பொருட்களின் உற்பத்தியாளர்கள் விதவிதமாக சிந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளின் ஸ்காக்ஸ் பாக்கெட்டுகளில் மினியேச்சர் பொம்மைகளை இணைத்து விற்பனை செய்வது. இந்த முயற்சிக்கு குழந்தைகளின் அமோக ஆதரவு கிடைத்ததை அடுத்து பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கு பிடித்த கேரக்டர்கள், பொம்மைகளின் மினியேச்சர்களை உணவுப்பொருளுடன் இணைத்து விற்பனை செய்கின்றன
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், மினியேச்சர் பொம்மையை தின்பண்டம் என்று தவறாக கருதி முழுங்கிவிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் உணவுப்பொருளுடன் மிகவும் சிறியதாக இருந்த பொம்மையை அந்த சிறுவன் கவனிக்காமல் விழுங்கிவிட்டதாகவும், இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு தொடர்ச்சியான வாந்தி வந்ததாகவும், உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தபோது, 'சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்' கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் அந்த உணவுப்பொருள் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.