கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பை இழந்த ஒரு குடும்பம் தற்போது ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டம் ராயபாக் அடுத்த பீராடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சதப்பா அண்ணப்பா சுதார் (60). இவரது மனைவி மகாதேவி (50) மற்றும் தத்தாத்ரேயா (28), சந்தோஷ் (25) எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா நேரத்தில் இரண்டு மகன்களும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பச் செலவுகளுக்காக சதப்பா பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார்.
அந்தக் கடனை திரும்ப கொடுக்குமாறு தினமும் கடன்காரர்கள் வீடு தேடி வந்துள்ளனர். ஆனால் சதப்பாவிற்கு வருமானம் இல்லாமல் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது மனைவியிடம் கூறி இருக்கிறார். இதைக் கேட்ட அவரது மனைவி மற்றும் மகன்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் உங்களோடு சேர்ந்து நாங்களும் தற்கொலை செய்து கொள்கிறோம் எனத் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் நேற்று ராயபாக் ரயில் நிலையத்திற்கு சென்ற அந்த குடும்பம் ரயில் நிலையத்தை தாண்டி சிறிது தூரத்தில் அவ்வழியாக வந்த ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் இவர்களின் உடல் சிதறி கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாகக் கூறப்படுகிறது. மேலும் சதப்பா குடும்பம் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என்பதைக் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout