close
Choose your channels

கொரோனாவுக்கு 4 முக்கிய தடுப்பூசிகள்: எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா???

Friday, April 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவுக்கு 4 முக்கிய தடுப்பூசிகள்: எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா???

 

தற்போதைய நிலைமைக்கு உலக மக்களின் ஒரே எதிர்ப்பார்ப்பாக இருப்பது கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே. இதுவரை மனிதர்களைப் பாதித்த எந்த வைரஸ் கிருமிகளுக்கும் நோய் தடுப்பு மருந்துகளோ, சிகிச்சை மருந்துகளோ கண்டுபிடிக்கப் படாத நிலையில் தற்போது கொரோனாவிற்கு தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிகள் விரைவுபடுத்தப் பட்டிருக்கின்றன. காரணம் கொரோனாவை போன்று இதுவரை உலகில் எந்த வைரஸ்களும் இத்தனை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் உலகில் 40 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கொரேனா தடுப்பு மருந்து பற்றிய ஆய்வுகளில் மிகவும் கவனத்தை ஈர்க்கத்தக்கதாக தற்போது, 4 மருந்துகள் மட்டுமே முன்னணி வரிசையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவியல் அடிப்படையில் இந்த தடுப்பு மருந்துகளின் தயாரிப்புகளும் வேறுபட்ட நிலைமைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுவாக வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும் மனிதன் மற்றும் விலங்குகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை செயற்கையாக தூண்டிவிடுவதற்கே தடுப்பு மருந்துகள் பயன்படுகின்றன. இந்தத் தடுப்பு மருந்துகள் என்பது பெருந்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் இரண்டு முறைகளில் தடுப்பு மருந்துகளை அறிவியல் உலகம் உருவாக்கி வருகிறது. ஒன்று உயிருள்ள வைரஸ்களின் வீரியத்தைக் குறைத்து தடுப்பு மருந்தை உருவாக்கி உடலுக்குள் செலுத்துவது (பி.சி.ஜி காசநோய்த் தடுப்பூசி போன்று). மற்றொரு முறையில் வைரஸ்களை முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிட்டு அதை தடுப்பு மருந்தாக உடலுக்குள் செலுத்திவிடுவது (போலியோ தடுப்பூசி). இரண்டு முறைகளுக்கு உண்மையான வைரஸ்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக வைரஸ்களை ஆய்வகங்களில் வைத்து உருவாக்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி உருவாக்கப்பட்ட வைரஸ்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. பெருந்நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இத்தகைய வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும்போது உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு அந்த நோயை எதிர்க்கும் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் அந்தநோயும் கட்டுப்படுத்தப்படும். தற்போது, கொரோனா மரபணுவை கொண்டு ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரஸ்களை வைத்துக்கொண்டே கொரோனா தடுப்பு மருந்து பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சீனா – சினோவேக் (Sinovac) என்ற தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது. இந்த மருந்தானது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. போலியோ தடுப்பூசி போன்று சினோவேக்கும் கொரோனா கிருமிகளை முற்றிலுமாக செயலிழக்கச் செய்து ஃபார்மால்டிஹைடு திரவத்தில் கலந்து தடுப்பூசியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ ஆராயச்சி நிலையத்தில் பணிபுரியும் ஸென் வெய் என்ற மருத்துவர் இதை உருவாக்கியிருக்கிறார். மேலும், சினோவேக் தடுப்பூசி கொரோனா வைரஸின் மேலுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது DNA Recombinant Technology எனும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மேலுள்ள புரதம் அல்லது மரபணு வரிசை மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

சனோஃபி எனும் பிரெஞ்சு நிறுவனம் டி.என். ஏ மறுஇணைப்பு செயல்முறையில் ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. அதாவது கொரோனா வைரஸில் இருக்கும் RNA மனித சுவாசப் பாதையில் இருக்கும் ACE2 புரதத்தை எளிதாகப் பற்றிக்கொண்டு நோயை உண்டாக்குகிறது. இந்த கொரோனா வைரஸின் RNA, மனித சுவாசப்பாதைகளில் ஏற்படுத்தும் இணைப்பை தடுப்பதற்கு ஒரு தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. தற்போது சனோஃபி உருவாக்கியிருக்கும் தடுப்பு மருந்து இதைப்போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது கொரோனவில் இருக்கும் RNA வை தனியாகப் பிரித்து எடுத்து அதில் இ.கோலி எனும் பாக்டீரியாவுக்குள் செலுத்துகிறார்கள். அந்த பாக்டீரியா கொரோனா RNA வில் வளர்ந்து கோடிக்கணக்காக பிரதியெடுக்கிறது. பின்பு அவற்றை பிரித்துஎடுத்து தடுப்பூசியாகப் பயன்படுத்துகிறார்கள். தற்போது மனிதர்களின்மீது இந்த தடுப்பு மருந்து சோதனை செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூனாவில் உள்ள சீரம் Institute, அமெரிக்காவின் Codagenix நிறுவனத்துடன் இணைந்து இதேபோன்ற ஒரு தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனமும் ஏறக்குறைய இதேபோன்ற தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவின் mRNA-1273 தடுப்பூசி

அமெரிக்காவில் உள்ள மாடெர்னா நிறுவனம் mRNA-1273 என்ற தடுப்பூசியை உருவாக்கி மனிதர்களின் மீது சோதனை நடத்தி வருகிறது. இந்த தடுப்பு மருந்தானது கொரோனா வைரஸின் மரபணு வரிசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதாவது கொரோனா வைரஸின் சைட்டோபிளாசத்தில் உள்ள RNA வை பிரதியெடுத்து அதை செயற்கை முறையில் தயாரித்து நானோ துகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்துகிறார்கள். அதன் பின்பு தடுப்பூசியாகப் பயன்படுத்துகின்றனர். mRNA நகலிலும் கொரோனா வைரஸின் மரபணு இருப்பதால் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாகச் செயல்படும் ஆற்றல் இதில் இருக்கிறது.

இதைத் தவிர ஜெர்மனியின் Biotechnology என்ற நிறுவனம் அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து கொரோவிற்கு தடுப்பூசியைத் தயாரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 200 மனிதர்களை தேர்வு செய்து அவர்களின்மீது பரிசோதனை செய்யவும் இந்நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஃப்ளூ காய்ச்சலுக்கு ஃப்ளூஜென் என்ற தடுப்பு மருந்தை தயாரித்து இருந்தது. அந்த தடுப்பு மருந்துடன் தற்போது கொரோனா மரபணுவை செலுத்தி இந்தியாவின் பாரத் பயோடெக் இண்டர் நேஷனல் நிறவனம் “கோரோஃப்ளூ” என்ற கொரோனா தடுப்பூசியைத் தயாரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கொரோனாவை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அதன் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாகவும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த முறைகளினால் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகள் எப்போது சந்தைக்கு வரும் என்பதுதான் தற்போது மக்கள் மத்தியில் உள்ள முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது முதலில் விலங்கினம் அடுத்து மனிதர்கள் எனப் பரிசோதிக்கப்பட்டு பக்கவிளைவுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியவே கிட்டத்தட்ட 1 வருடம் ஆகிறது. எனவே படிப்படியான சோதனைக்களுக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி கிடைக்க 18 மாதங்கள் பிடிக்கும் எனவும் மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment