கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு… அபாயக் கட்டத்தில் இன்னும் பலர்… அதிர்ச்சி சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாரயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அபாயக் கட்டத்தில் 7 பேர் அம்மாநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் உத்திரப் பிரேதேசத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
புலந்தசாகர் மாவட்டம் சிக்கந்தராபாத் அடுத்த ஜீத்காதிகி எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கள்ளச்சாரயம் குடித்த சிலருக்கு கடுமையான வாந்தி பேதி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் (35), கலுவா (40), ரஞ்சித் (40), சுக்பால் (60) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மேலும் இதேபோன்று கள்ளச் சாரயத்தைக் குடித்த அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கடும் அபாயத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யனார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் புலந்தசாகர் மாவட்டத்தின் சூப்பிரண்ட் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 people dead, 7 hospitalised after consuming liquor in Bulandshahr.
— ANI UP (@ANINewsUP) January 8, 2021
CM Yogi Adityanath orders strict action against the culprit and distillery.
"Three police personnel including Station Incharge suspended. Further investigation underway," says SSP Bulandshahr pic.twitter.com/HyNAgSuSxE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments