அடுத்தடுத்து ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்… திடுக்கிடும் பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையால் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் வடமாநிலங்களில் போதைப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் நேற்று சிறப்பு அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை பகுதியில் நேற்று வருவமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது ரூ.3 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து 4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com