லாக்டவுன் நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்களுக்கு ஆபத்து! அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் லாக்டவுன் மே 3ஆம் தேதிக்கு பின்னர் நீட்டித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்தியாவில் சுமார் 85 கோடி மொபைல் போன் பயனாளிகள் இருப்பதாகவும் இவர்களில் ஏற்கனவே 2.5 கோடி மொபைல் பயனாளிகள் தங்களுடைய மொபைல் பழுது காரணமாக இயங்காமல் இருப்பதாகவும் இதனை அடுத்து மே 3ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு மேலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதமோ நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போன்கள் பழுதாகி முடங்கி போக வாய்ப்பு இருப்பதாக இந்தியன் செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது
மொபைல் போன்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மொபைல் போன்கள் சர்வீஸ் கடைகள் முழுவதும் தற்போது மூடப்பட்டு இருப்பதன் காரணமாக மொபைல் போன்கள் பழுது பார்க்க முடியாமல் இருப்பதாகவும், புதிய மொபைல்கள் வாங்குவதற்கும் கடைகள் இல்லாததால் மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் பழுதாகி உள்ள மொபைல் போன்களை வைத்து இருப்பவர்கள் திணறி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
எனவே ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மொபைல் போனையும் சேர்க்க வேண்டும் என்றும் மொபைல் போன்கள் சர்வீஸ் கடைகள் மற்றும் உதிரிபாகங்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியன் சென்றுள்ளார் மற்றும் எலக்ட்ரானிக் அசோசியேஷன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments