கோவையில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்...! பலருக்கும் கண்போன பரிதாபம்.....!
- IndiaGlitz, [Monday,July 05 2021]
கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 30 நபர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியிருப்பதாவது, கோவையில் சுமார் 390 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்ட நிலையில், 113 நபர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதில் 30 நபர்களுக்கு கண் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தாமதமாக வந்த காரணத்தால், அவர்கள் பார்வையை இழந்துள்ளனர்.
இந்த நோயின் தாக்கத்தை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற்று வந்தால் பார்வை இழப்பு போன்றவற்றை தவிர்க்கலாம். கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டும், தனி மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மூக்கடைப்பு, கண் வலி, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் இருந்தால், மக்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும் எனக் கூறினார்.