என் பேரு மீனாகுமாரி.. 38 வயது முமைத் கானை கட்டி பிடித்திருக்கும் நபர் யார்?

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

விக்ரம் நடித்த ’கந்தசாமி’ என்ற திரைப்படத்தில் ’என் பேரு மீனா குமாரி’ என்ற பாடலுக்கு நடனமாடிய முமைத்கான் தற்போது 38 வயதில் இருக்கும் நிலையில் அவர் தனது தோழியை கட்டிப் பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி மொழியிலும் பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் நடிகை முமைத் கான்.

38 வயது ஆகியும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 49 நாட்கள் இருந்த அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தோழி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவரை கட்டி அணைத்திருக்கும் தோழி யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.