போதைக்காக உயிரைவிட்ட 38 பேர்!!! தொடரும் அவலம்!!!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

 

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நேரத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா, டார்ன்தான் ஆகிய பகுதிகளில் போலி விஷ சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷசாராயத்தை அருந்தியதால் கடந்த புதன்கிழமை முதல் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் உயிரிழப்பு 21 எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒட்டுமொத்த உயிரிழப்பு 38 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதில் பஞ்சாப்பின் ஊரகப்பகுதிகளில் 10 பேரும், பாடாலா பகுதியில் 10 பேரும், டார்ன்தான் பகுதியில் 19 பேரும் உயிரிழந்து இருப்பதாக டிஜிபி டிங்கர் இப்தான் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அம்மாநில முதல்வர் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தர விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மக்கள் இப்படி விபரீத முடிவுகளில் இறங்க வேண்டாம் என்று அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சமும் அப்பகுதியில் எழுந்திருக்கிறது. நேற்று ஆந்திராவில் அதிகப் போதைக்காக சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த விவகாரத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.