ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 22 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்த நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்து சமூக இடைவெளியை பின்பற்றாததன் பாதிப்பு தற்போதுதான் தெரிகிறது. கோயம்பேடு சந்தை வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரி ஒருவரால் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு பழ வியாபாரி ஒருவர் மூலம் அவருடைய மகனுக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சுமை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த கடந்த 4 நாட்களில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளவர்களில் 38 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் நால்வர் கூலித்தொழிலாளிகள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் கோயம்பேட்டில் 400-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் முடிவுகள் வந்தபின்னர் தான் கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பது தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தேனாம்பேட்டை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு மார்க்கெட்டை இரண்டு நாட்கள் முழுமையாக மூடிவிட்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments