ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட் 

கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 22 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்த நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்து சமூக இடைவெளியை பின்பற்றாததன் பாதிப்பு தற்போதுதான் தெரிகிறது. கோயம்பேடு சந்தை வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரி ஒருவரால் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு பழ வியாபாரி ஒருவர் மூலம் அவருடைய மகனுக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சுமை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 4 நாட்களில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளவர்களில் 38 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் நால்வர் கூலித்தொழிலாளிகள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் கோயம்பேட்டில் 400-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் முடிவுகள் வந்தபின்னர் தான் கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பது தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தேனாம்பேட்டை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு மார்க்கெட்டை இரண்டு நாட்கள் முழுமையாக மூடிவிட்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 

More News

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர் குழு தகவல்

தமிழ்நாட்டில், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ ஆலோசனைக்குழு, தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரிஷிகபூரின் இறுதி சடங்கிற்காக 1400 கிமீ பயணம் செய்யும் மகள்!

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளதாக

இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்!!!

உலகையே படாய்ப் படுத்திவரும் கொரோனா ஒருசில நாடுகளில் மட்டும் தலைக் காட்டவில்லை

இந்தியா: ஊரடங்கில் 37 ஆவது நாளில் இருக்கிறோம்!!! நிலமை என்ன???

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக இந்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பூமிக்குக் கொடுத்த வரம்!!! Co2 வின் அளவு 8% குறைந்திருக்கிறது!!!

கொரோனாவின் தாக்கத்தினால் மனிதர்கள் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையும், விலங்குகளும் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருக்கின்றன.