தேறிவரும் சென்னை, மோசமாகும் மற்ற மாவட்டங்கள்: தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்
- IndiaGlitz, [Wednesday,July 08 2020]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இன்றும் 4000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 2000க்கும் குறைவான பாதிப்பு உள்ளது என்பதும் ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 என அதிகரித்துள்ளது
மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் மட்டும் 26 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் சென்னையில் மட்டும் 1852 பேர் குணமாகி இன்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மொத்தம் 72500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1700ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3051 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மொத்தம் 74,167 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 35979 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 14,49,414 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது