1000க்கும் அதிகமான உயிரிழப்புகள்: 50 ஆயிரத்தை தாண்டிய சென்னை கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று மதுரையில் 217 பேர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேர்களும், திருவள்ளூரில் 146 பேர்களும், வேலூரில் 118 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும். கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ முதல்முறையாக தாண்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2737 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 44,094 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 34805 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 10,77,454 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

More News

மகனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்த பெற்றோர்கள்

மகனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மனநோய்‌ உள்ளவர்களால்‌ மட்டுமே இந்த கொடுமையை செய்ய முடியும்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் நடிகர் 

சாத்தான்குளம் விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் மிகவும் தீவிரமாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவ்வபோது பார்த்து வருகிறோம்.

ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல் 

இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன