1000க்கும் அதிகமான உயிரிழப்புகள்: 50 ஆயிரத்தை தாண்டிய சென்னை கொரோனா பாதிப்பு
- IndiaGlitz, [Saturday,June 27 2020]
தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று மதுரையில் 217 பேர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேர்களும், திருவள்ளூரில் 146 பேர்களும், வேலூரில் 118 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும். கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ முதல்முறையாக தாண்டியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2737 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 44,094 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று தமிழகத்தில் 34805 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 10,77,454 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது