37 வருடங்களுக்கு முன் லட்சுமி ராமகிருஷ்ணன் எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனர் அவதாரத்தில் ஜொலித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், 37 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.
இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கிய ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன், அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி கடந்த 2012ஆம் ஆண்டு ’ஆரோகணம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அதன்பின்னர் ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’சொல்வதெல்லாம் உண்மை’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கினார். இந்தநிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கணவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் லட்சுமிராமகிருஷ்ணன் இளமையாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Throwback ; 15th April 1984 ... pic.twitter.com/tnQBn7hgyw
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) February 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments