37- சீட் கொடுத்தும், போட்டியிடாத சரத்...! என்ன தான் ஆச்சு சமக-வுக்கு..?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமத்துவ மக்கள் கட்சி-யின் சார்பாக இந்த சட்டமன்ற தேர்தலில், தலைவர் சரத்குமார் போட்டியிடாதது அக்கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.இச்சமயத்தில் சரத்குமார் ஏன் போட்டியிடவில்லை என்ற செய்திகள் கசிந்துள்ளது.
அதிமுக-விடம் கூட்டணி வைக்க சமக பேச்சு வார்த்தை நடத்த, "1,2 சீட் கொடுத்தால் கூட்டணி வைக்க மாட்டோம். இவ்வளவு காலம் கூட்டணி அமைத்ததால் எங்கள் பலம் தெரியாமல் போய்விட்டது. எங்களது தனித்தன்மையை அறிந்து எங்களுக்கு சீட் தர வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசியியிருந்தார், மேலும் சசிகலாவையும் சந்தித்து பேசினார். ஆனால் அதிமுக சரத்குமாரை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் மக்கள் நீதி மையத்தை தலைவர் கமல்ஹாசனை சந்தித்து கூட்டணிக்கு பேசினார் சரத்குமார். கமலும் இதை ஒத்துக்கொண்டு 40 சீட்டுகளை இவருக்கு வாரி வழங்கினார். ஆனால் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று கம்பீரமாக பேசிய சரத்தால் 37-சீட்டுகளுக்கு மட்டுமே ஆள் தேற்ற முடிந்தது. 3-சீட்டுகளை திருப்பி மநீம-த்திடமே கொடுத்துவிட்டார். அந்த அளவிற்கு கெடுபிடி காட்டிய சரத்குமாரும் போட்டியிடவில்லை, அவரது மனைவி ராதிகாவும் போட்டியிடவில்லை.
சமூக வலைதள முணுமுணுப்புகள்:
கமல் 37 சீட்டுகள் தந்தும் சரத் போட்டியிட தயங்குவது ஏன்..? அதிமுக 2 சீட்டுகள் தந்திருந்தால் இப்படி ராதிகாவும்,சரத்தும் நடந்துகொள்வார்களா..? என சமூக வலைத்தளங்களில் தொடர் கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது. ஒரு கட்சியின் தலைவர் போட்டியிட்டால் தான், அக்கட்சியில் பிற வேட்பாளர்களுக்கு நம்பிக்கை வரும் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
விருதுநகர் தொகுதியில் களம் இறங்கினால் சமுதாய வாக்குகள் பெருமளவில் விழக்கூடும் எனக்கருதி அத்தொகுதியை, தமக்கு ஒதுக்கும் படி கமலிடம் சரத் கேட்டாராம். சமக-வை விட, மய்யத்திற்கு அத்தொகுதியில் ஆதரவு அதிகமாக இருப்பதால், சரத்திற்கு அத்தொகுதியை ஒதுக்கினால் நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என மநீம- நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் கமல்-ம் சற்று
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments