மருமகனுக்கு 365 வகையான சாப்பாடு… அசத்தும் பெண் வீட்டாரின் உபசரிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மருமகனுக்கு விருந்து வைத்து அசத்துவதில் எப்போதும் பெண் வீட்டார் கெட்டிக் காரர்கள்தான். ஆனால் சமீபகாலமாக டஜன் கணக்கில் உணவு வகைகளை சமைத்து விருந்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம் பகுதியில் குந்தவி என்பவருக்கும் சாய் கிருஷ்ணா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சங்கராந்தியை முன்னிட்டு தங்களுடைய வருங்கால மருமகனுக்கு விருந்து வைக்க நினைத்த தாத்தா வெங்கடேஷ்வர ராவ் 365 வகையான உணவுகளை சமைத்து விருந்து வைத்து எதிர்கால திருமண ஜோடியை அசத்தியிருக்கிறார். இதைப் பார்த்த குந்தவி- சாய் கிருஷ்ணா இருவரும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிய சம்பவம் பார்ப்பவர்களையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
இந்த விருந்தில் காய்கள், பழங்கள், 100 வகையான இனிப்பு, 70 வகையான காரம், 30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, 15 வகையான ஐஸ் கிரீம், கேக்குகள் என அனைத்தும் இடம்பெற்றிருந்தன.
இதேபோல நரசாரபுரம் பகுதியைச் சேர்ந்த வினய்குமார் என்பவருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய மனைவி யசோதா சாய் என்பவரது பெற்றோர் 365 வகையான சாப்பாடுகளை செய்து அசத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அவர்களுடைய விருந்தில் 40 அசைவ உணவுகள், 140 மாவு பலகாரங்கள், 20 ஐஸ் க்ரீம் வகைகள், 35 பிஸ்கெட் வகைகள், 25 வகை பழங்கள், 30 சைவ உணவுகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த விருந்து நிகழ்ச்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும், இதைப்பார்த்த நம்முடைய நெட்டிசன்கள் ஏக்கப்பெருமூச்சு விடுவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com