2வது நாளாக 3500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 2000ஐ நெருங்கும் சென்னை
- IndiaGlitz, [Friday,June 26 2020]
தமிழகத்தில் தினமும் கொரோனாவின் பாதிப்பு 100, 200 என இருந்தபோதே அதிர்ச்சி அடைந்த நாம், தற்போது 1000, 2000ஐ தாண்டி தற்போது 3000ஐ தாண்டி வருவதை பார்த்து அதிர்ச்சியின் உச்சகட்டத்திற்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் நேற்றை போலவே இன்றும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 3500ஐ தாண்டியுள்ளது
தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,606 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 2000 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 46 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1358 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 41,357 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று தமிழகத்தில் 33,675 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 10,42,649 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது