36 நாள், ஏக் தம்மில் ஒரே ஷெட்யூல்ட்.. எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் மீண்டும் பிஸியாகி உள்ள எஸ்ஜே சூர்யா தான் நடித்து வரும் அடுத்த திரைப்படம் 36 நாட்களில் ஒரே செட்டியூரில் எடுக்கப்பட்டு வருவது குறித்து ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என்பதும் இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’ஜிகர்தண்டா’ என்ற வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
36 நாட்களில் ஒரே தம்மில் ஒரே ஷெட்யூலில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்ன ஒரு கான்செப்ட்? என்ன ஒரு செட்? என்ன ஒரு போட்டோகிராபி? என்ன ஒரு பிரம்மாண்டம்? என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ? அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்து, ‘அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் நிமிஷா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments